இலவச கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை அறிவிப்பு

The University of Chennai has announced that you can apply for the free education program in the coming academic year. In this regard, the Registrar of the University of Chennai has issued a statement: The University of Chennai has been implementing a free education program since the last academic year 2010-11 to enable poor students to enroll in undergraduate courses. Accordingly, applications are invited for admission to undergraduate courses in self-funded and government aided colleges affiliated to the University of Chennai under the Free Education Scheme for the coming 2022-23 academic year. Students wishing to apply must have passed Class 12 in the 2021-22 academic year. Priority will be given to economically backward students, destitute students and first generation graduates. The annual family income of the students applying should not exceed Rs. 3 lakhs. Students wishing to apply should go to the website www.unom.ac.in and apply within 15 days from the date of publication of Class 12 General Examination results. More information can be found on the aforementioned website. இலவச கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் வருகிற கல்வியாண்டில் இலவச கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கை:


ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் கடந்த 2010-11ம் கல்வியாண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வித்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


அந்தவகையில், வருகிற 2022-23 கல்வியாண்டில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை பல்கலை அறிவிப்பு


விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 2021-22 கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.unom.ac.inஎன்ற இணையதளம் சென்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு மேற்கூறிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post