பொதுத்தேர்வு எழுதாத 6 லட்சம் பேருக்கு அரிய வாய்ப்பு!!

The school education department has ordered to identify those who did not participate in the 10th, 11th and 12th class general examinations and to write the by-examination.

The general election, which began in the first week of May, ended recently. According to the Department of State Examinations, tens of thousands of students have not taken part in the general examination every day since the 10th, 11th and 12th class general examinations began.

The learning gap experienced by students during the Corono epidemic, such as fears over the general examination, was cited as the reason why students did not appear for the general examination.

In this situation, the school education department has ordered the district primary education officers to immediately enroll 6,49,467 students who did not participate in the 10th, 11th and 12th class general examinations in the by-examination to be held this year. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காதவர்களை கண்டறிந்து துணைத் தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய பொதுத்தேர்வு அண்மையில் முடிவடைந்தது. 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரணமாக முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,49,467 மாணவர்களை இந்த ஆண்டு நடைபெற உள்ள துணைத் தேர்வில் உடனடியாக தேர்வு எழுத வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post