50க்கும் மேற்பட்ட கிராம பள்ளி மாணவர்கள் பாதிப்பு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 19, 2022

50க்கும் மேற்பட்ட கிராம பள்ளி மாணவர்கள் பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூரில் பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் உள்ளிட்ட கிராமங்களை இணைக்கக் கூடிய தரைப்பாலம் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஆம்பூரில் இருந்து குடியாத்தம் உள்ளிட்ட கிராங்களை இணைக்கக் கூடிய மாதனூர் தரைப்பாலம் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த தரைப்பாலம் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. அரசு சார்பில் மணல் மூட்டைகள் ராட்சத பைப்புகள் மற்றும் மண் போன்ற பொருள்களைக் கொண்டு தற்காலிக சாலையாக அமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்நிலையில், கடந்த 1 வார காலத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் தற்போது தரைப்பாலம் சுமார் 20 அடி அகலத்திற்கு பாலாற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்பூரில் இருந்து குடியாத்தம் மற்றும் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூர் செல்லக்கூடிய மிகமுக்கியமான சாலை என்பதால் பள்ளி மாணவர்கள் பணிக்கு செல்பவர்கள் என ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot