அதிகரிக்கப்பட்டுள்ள கால்நடை அறிவியல் சீட்டுகளுக்கு இ.டபுள்யூ.எஸ்., பிரிவு மாணவர்களிடமிருந்து வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு கால்நடை மருத்துவ கல்லுாரியில் இருந்த 80 கால்நடை அறிவியல் படிப்பு இடங்கள் 100 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் 15 சீட்டுகள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 85 சீட்டுகளில் 68 சீட்டுகள் சென்டாக் மூலம் சேர்க்கை நடத்தப்பட்டது.இந்நிலையில் எஞ்சியுள்ள 17 கால்நடை அறிவியல் படிப்பு சீட்டுகளும் தற்போது சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இதனையொட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பிரான இ.டபுள்யூ.எஸ்., பிரிவினரிடமிருந்து நேற்று முதல் விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகிறது. www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மாணவர்கள் இ.டபுள்யூ.எஸ்., சான்றிதழ் இருந்தால் தங்களுடைய லாகின் மூலம் அப்லோடு செய்யலாம். இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.