பிளஸ் 2 தேர்வை புறக்கணித்த மாணவியர்!

கர்நாடகாவில், பிளஸ் 2 பொதுத் தேர்வு அறையில், 'ஹிஜாப்' எனப்படும் தலை மற்றும் முகத்தை மறைக்கும் துணியை அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, இரண்டு மாணவியர் தேர்வு எழுதாமல் வெளியேறினர்.

மேல்முறையீடுகர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அரசின் உத்தரவை உறுதி செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், கர்நாடகாவில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று துவங்கி, அடுத்த மாதம் 18 வரை நடக்கிறது. மொத்தம் 1,076 மையங்களில் 6.84 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு மையத்தில் ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு மாநில கல்வி அமைச்சர் நாகேஷிடம் முஸ்லிம் மாணவியர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கைஆனால், 'நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக விலக்கு அளிக்க முடியாது' என அமைச்சர் தெரிவித்தார்.இந்நிலையில், நேற்று பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவியர், தாங்கள் அணிந்து வந்த ஹிஜாபை, தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன் கழற்றி வைத்தனர். தேர்வு முடிந்த பின் மீண்டும் அணிந்து சென்றனர். ஹிஜாப் விவகாரத்தில் முதன்முதலில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மாணவியர் ஆலியா ஆசாதி மற்றும் ரேஷம் இருவரும் உடுப்பியில் உள்ள வித்யோதயா கல்லுாரியில் தேர்வு எழுத வந்தனர். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்குமாறு, தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் கல்லுாரி முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் அனுமதி மறுத்தனர். இருவரையும் சம்மதிக்க வைக்க 45 நிமிடங்கள் பேச்சு நடத்தியும் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இதைஅடுத்து, மாணவியர் இருவரும் தேர்வு எழுதாமல் வெளியேறினர்.
Post a Comment (0)
Previous Post Next Post