‘அண்ணாவின் தமிழியம்’ குறுகிய கால படிப்பு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் அறிமுகம்
சென்னை, செப். 15: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ‘அண்ணாவின் தமிழியம்' என்ற குறுகிய கால படிப்பு அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி கூறி னார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக'அண்ணா இருக்கை'சார் பாக, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ‘அண்ணாவின் ஆளுமை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கருத்தரங்குக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேரா சிரியர் கோ. பார்த்தசாரதி தலைமை வகித்துப் பேசுகையில், தமிழ் நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ‘அண்ணாவின் தமிழியம்' என்ற குறுகிய கால படிப்பு அறிமுகம் செய்யப்படும்.
இந்தப் படிப் பின் மூலம் இளைய சமுதாயத்திற்கு அண்ணாவின் தமிழியம் பற் றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அ. அருள்மொழி, அண் ணாவின் ஆளுமை குறித்து சிறப்புரையாற்றினார். அப்போது,அண் ணாவின் பன்முக ஆளுமைகளை அவர் வாழ்வில் நடந்த பல சம் பவங்களைக் கொண்டு விளக்கினார்.
பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கு.ரத்னகுமார் மற்றும் இந்திய (ம) அயலக மொழிகள் புலத்தலைவர், பேராசிரியர் சு. பாலசுப்பிரமணியன் அண்ணாவின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவில் அண்ணா இருக்கையின் ஆலோசகர் பேராசிரியர் பா.உதயகுமார் வரவேற்றுப் பேசினார். தமிழ் மற்றும் பண்பாட்டு புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் மு.வையாபுரி நன்றியுரை வழங்கினார். விழாவில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.