சேலம் மாவட்டத்தில் நாளை (09.09.2021) வியாழக்கிழமை மொத்தம் 526 மையங்களில் 59,080 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன - செ.வெ.எண்:35/2021 : நாள்:08.09.2021

செ.வெ.எண்:35/2021

நாள்:08.09.2021

சேலம் மாவட்டத்தில் நாளை (09.09.2021) வியாழக்கிழமை மொத்தம் 526 மையங்களில் 59,080 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

இம்மையங்களில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்படவுள்ளன. இக்கொரோனா தடுப்பூசி போட செல்லும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து விரிவான நடைமுறைகள் ஏற்கனவே ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 59,080 டோஸ்கள் கையிருப்பின் அடிப்படையில் நாளை 09.09.2021 வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் (398) அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (87), நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (4), அனைத்து அரசு மருத்துவமனைகள் (12), அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட்ட 24 மையங்கள் என மொத்தம் 526 மையங்களில் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் தவறாமல் அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, முகக்கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளி கடைபிடித்தும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போடப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post