பீஸ் கட்ட பணம் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை
கருத்துவேறுபாடால் பிரிந்திருந்த பெற்றோரை சேர்த்து வைத்த கல்லூரி மாணவன், பீஸ் கட்ட பெற்றோர் பணம் தராததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை, மணப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (45) இவரது மனைவி வள்ளி (38), மகன்கள் கார்த்திக்(23), சஞ்சய் (22). பெற்றோர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அண்ணனும் தனியாக வசித்து வந்தார். இதனால் மனமுடைந்த சஞ்சய், 10ம் வகுப்பு படிக்கும்போது வீட்டை விட்டு வெளியேறி ஊரப்பாக்கத்திற்கு வந்துள்ளார். அப்போது ஊரப்பாக்கம் மேற்குபகுதி, ராம் நகரை சேர்ந்த மோகனுடன் நட்பு ஏற்பட்டது. தனது குடும்ப பிரச்னையை மோகனிடம் சஞ்சய் கூறியுள்ளார்.
இதையடுத்து மோகன் தனது நண்பரை சொந்த செலவிலேயே 11, 12-ம் வகுப்பு படிக்க வைத்தது மட்டுமில்லாமல், சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோர் மற்றும் அண்ணனை சேர்த்துவைக்க சஞ்சய் முடிவு செய்துள்ளார். பின்னர் 3 பேரையும் சமாதானம் செய்து வைத்து ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐஞ்சு பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வைத்து 3 பேரையும் கடந்த 4 மாதமாக தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் 2ம் ஆண்டு படிப்பதற்காக பீஸ்கட்ட பெற்றோரிடம் சஞ்சய் பணம் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த சஞ்சய் நேற்று அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மதியம் நண்பனை பார்க்க மோகன் வந்தார். வீட்டுக்குள் சஞ்சய் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்ஐ ஜோதி வழக்கு பதிவு செய்தார். தற்கொலை செய்து கொண்ட சஞ்சய் எழுதிவைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
* நண்பனின் படிப்புக்காக திருமணம் செய்து கொள்ளாத வாலிபர் பெற்றோரை பிரிந்து தன்னை தேடி வந்து உடன் பிறந்த தம்பியை போல பழகிய சஞ்சயை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்க வைத்தது மட்டுமல்லாமல், கல்லூரி முதலாம் ஆண்டு வரை படிக்க வைத்தார் மோகன்.மேலும் சஞ்சயின் பெற்றோர், அண்ணனை சேர்த்து வைக்கவும் பாடுபட்டார். நண்பனின் படிப்புக்காக மோகன் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.