மாணவிக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது!

கரூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியரை பள்ளியில் சிறை பிடித்து பெற்றோர்கள் தாக்கி உள்ளனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பிற்கு தமிழ் ஆசிரியராக உள்ள நிலஒளி (40). அந்த பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி கடந்த நான்கு மாதமாக மொபைலில் ஆபாசமாக வீடியோ எடுத்தும், நேரடியாக வீடியோ பதிவிட செய்தும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே மாணவியை மிரட்டியதாகவும், இறுதி தேர்விற்கு உன்னை அனுப்ப மாட்டேன். தேர்ச்சி பெறாத வகையில் செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். மேலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். மிரட்டல் ஆசிரியருக்கு பயந்த மாணவி கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக ஆசிரியர் சொல்வதை அனைத்தையும் செய்து வந்துள்ளார்.

ஆசிரியரின் செல்போன் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக வீடியோவை எடுத்து காண்பிக்க சொல்லி மிரட்டி உள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து மொபைல் போனை ஆராய்ந்து பார்த்ததில் ஆசிரியர் பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை சிறைபிடித்து தரையில் அமர வைத்து அடித்து உதைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மட்டுமே இவரை அனுப்ப முடியும் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக பெற்றோர்கள் உறவினர்கள் ஆசிரியரை சிறை பிடித்து பள்ளியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரம் நெருங்கிய நிலையிலும் பள்ளி நிர்வாகத்தினர் ஒருவர் கூட வராததால் பெற்றோர்கள் உறவினர்கள் கடும் கோபம் அடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தொடர் போராட்டத்தால் கூடுதலாக லாலாபேட்டை காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post