கடலுார் மாவட்டத்தில், நடப்பாண்டு 'நீட்' தேர்விற்கு, அரசு சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யாததால், தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 2017ம் ஆண்டு முதல் 'நீட்' தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கு தயாராவதற்காக, 2017ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அதற்கென அமைக்கப்பட்ட மையங்களில், விடுமுறை தினங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி கடலுார் மாவட்டத்தில் 14 மையங்களில் பயிற்சி நடத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஆன்லைன் மூலம் விண்ணபித்து, ஆன்லைன் மூலமாகவே பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போது, கடலுார் மாவட்டத்தில் 500 மாணவ, மாணவியர் விண்ணப்பித்து, பயிற்சியில் பங்கேற்றனர்.
அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் அரசுப்பள்ளியில் படித்தோருக்கு, கடந்த ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்காக 26 பேருக்கு கல்வித்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இவர்களில் 24 பேர் அரசின் இலவச நீட் பயிற்சி பெற்றவர்கள்.
இதன் காரணமாக, மாணவ மாணவியரிடையே நீட் பயிற்சி மீதான ஆர்வம் அதிகரித்து, கடலுார் மாவட்டத்தில் நீட் பயிற்சியில் சேர, தற்போது கூடுதலானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால் பயிற்சி வகுப்பு குறித்த எந்த அறிவிப்பையும் கல்வித்துறை அறிவிக்கவில்லை. வரும் ஜூலை 17ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், அதற்கு தயாராக முடியாமல் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு 'நீட்' தேர்வுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் மாணவ மாணவியர்களின் பயிற்சி வகுப்பு பற்றி வாய்திறக்காமல் உள்ளது. ஒரு மாத காலம் தீவிர பயிற்சிகள் வழங்கினால், அதிக மாணவர்கள், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மாவட்டம் முழுவதும் பயிற்சி மையங்கள் அமைத்து, சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கினால், கடந்த ஆண்டுகளை போல் அதிக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவர். அத்துடன், அவர்களுக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைக்கும்.ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அரசு சார்பில் நீட் தேர்வுக்கான பயி்ற்சி குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வரவில்லை.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, தனியார் பயிற்சி மையங்களில் படிக்கின்றனர். வசதியில்லாத அரசு பள்ளியில் படித்த மணவர்கள் பயிற்சி பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தும், மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.