மாம்பழ சீசன் துவக்கம்
மதுரையில் மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், சந்தையில் விற்பது 'கார்பைடு' கல்லால் பழுக்க வைத்த மாம்பழமா என தெரியாமல் பொதுமக்கள் தவிப்பில் உள்ளனர்.
கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழங்களின் தோல் மஞ்சள் நிறத்திலும், உள்ளே சதைப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் இந்த முறையில் பழுக்க வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் குறுகிய காலத்தில் விற்று லாபம் பார்க்க, காய்களை செயற்கையாக பழுக்க வைக்கும் வியாபாரிகள் சிலர் மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர். 'கார்பைடு' கல்
மதுரை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், உதவி பேராசிரியர் வள்ளல்கண்ணன் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலை 'எத்திரல்' என்ற வளர்ச்சி ஊக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பெயரில் பல்வேறு நிறுவனங்கள் திட, திரவம், வாயு இதை தயாரிக்கின்றன. வாழைப்பழத்திற்கு திரவ வடிவிலும், மாம்பழங்களுக்கு திரவ வடிவிலும் பயன்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி 'எத்திரல்' திரவம் கலந்து அதில் ஒவ்வொரு மாம்பழத்தையும் 10 வினாடி மூழ்கவைத்து எடுத்தால் 2 நாட்களில் முழுவதுமாக இயற்கை முறையில் பழுத்துவிடும். சதைப்பகுதியும் பழமாகிவிடும். உடலுக்கு கெடுதல் இல்லை. இதை பயன்படுத்துவது நல்லது என்றனர்.