5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம் - போக்குவரத்துத் துறை விளக்க அறிக்கை!! - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Monday, May 9, 2022

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம் - போக்குவரத்துத் துறை விளக்க அறிக்கை!!

செய்தி வெளியீடு

நாள்: 09.05.2022

09.05.2022 இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் "5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பயணச்சீட்டு முன்பதிவை அனுமதிக்கவும்: பெற்றோர்" என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி குறித்து கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது. கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையின் போக்குவரத்துத் துறை, 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் பெறுவதற்கு பதிலாக, இனிவரும் காலங்களில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ஏதும் பெறப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரைக் கட்டணம் பெற வேண்டும் என மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான பயணச்சீட்டு இரத்து பற்றி பொதுமக்கள் சிலரின் கருத்துகள். மற்றும் சந்தேகங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனால், பொதுமக்கள் சிலர் தங்களது குழந்தைகளை மடியில் அழைத்து செல்வது அசௌகரியம் ஏற்படும் எனவும், விருப்பமுள்ளவர்கள் தங்களது 3 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு பயணச்சீட்டு பெற்று பயணிப்பது தேவை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக முன்பதிவு செய்யும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அவர்களது குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை தொடர்ந்து இருக்கும். மேலும், பயணிகள் பயணிக்கும் போது அவர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. மேலும் அவ்வாறே தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும். எனவே. தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன விதிகளில் அரைக்கட்டணம் சம்மந்தமாக. 3 வயது முதல் 12 வயது என்பதற்கு பதிலாக, 5 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரைக்கட்டணம் வசூலிக்கலாம் என உரிய முறையில் திருத்தங்கள் செய்யப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot