TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 21, 2022

TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குரூப் 4 தேர்வு ‌ஜூலை 24- 2022 அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளிவந்து விண்ணப்பிக்கும் காலமும் முடிவடைந்துள்ளது.

அரசின் அறிவிப்பில் 7301 பணியிடங்களை அறிவித்துள்ளது. இதனை அடுத்து மாணவர்களுக்கு உடனடியாக குரூப் 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சியளிக்க Dr. அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி உள்ளது. ஏற்கெனவே நடந்து வந்த குரூப் 2 வகுப்பிற்கான தேர்வு 21.5.2022 அன்று நடைபெற உள்ளதால் 22.5.2022 அன்றே குரூப் 4 வகுப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது‌.

மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள குறுகிய கால இடைவெளியே உள்ளதால் மாதிரி தேர்வை தொடர்ந்து விரிவான கலந்துரையாடலையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது. இதர விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசின் தேர்வாணைய இணையதளத்தை சென்று ( www.tnpsc.gov.in ) பார்க்கவும்.

குரூப் 4 தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கு எட்டு வாரகாலமே பயிற்சிக்கு உள்ளதால் பயிற்சி வகுப்புகள், தொழில் நுட்பரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். அதிகபட்சமாக வகுப்புகள், மாதிரி தேர்வும் அதையொட்டிய மாணவர்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்யும் வகையில் கலந்துரையாடல் வடிவத்திலேயே இருக்கும். தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் ஆலோசனைகளை வழங்குவார்கள். அரசுத் துறைகளில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வகுப்புகளை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்திவருகிறது.

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தி வருகிறது. வழிகாட்டுதல் தேவைப்படும் கிராமப்பற மாணவர்கள், வீட்டிலிருந்தே பயிற்சி எடுத்தவர்கள், பயத்தினால் வாய்பை தவறவிட்டவர்கள் இந்த வகுப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த பத்து ஆண்டுகளாக பயிற்சி களத்தில் கிடைத்த முன் அனுபவங்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றோம். இங்கு பயின்ற 1200-கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுத்துறைகளின் பல்வேறு நிலைகளில் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் ஏற்கெனவே பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாணவர்கள் தேர்விற்காக படித்திருந்து கூடுதலாக வழிகாட்டுதல் தேவைபடும் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வகுப்புகள் வாரந்தோறும் நடக்கும். ஒவ்வொரு வாரமும் நடக்கும் இந்த மாதிரி தேர்வுடன் கூடிய சிறப்பம்சமே எல்லா மாணவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்று தனது திறமையை மேம்படுத்துவதுடன் தேர்வில் அதிகபட்ச பலத்தோடு வெற்றி பெறுவதுதான்.

Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மாணவர்களுக்காக கோயம்புத்தூரிலும், பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

சமூக அக்கறையுடன் பின்தங்கிய மாணவர்களுக்கு தன்னார்வத்துடன் வகுப்பெடுக்க விருப்பம் உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தங்களது தற்போதைய புகைப்படம் மற்றும் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்ததின் நகலை உடன் (Xerox copy) கொண்டு வர வேண்டும். தவறும் மாணவர்கள் வகுப்பினுள் நுழைய அனுமதியில்லை.

மாணவர்கள் TNPSC குரூப் 4 தேர்வில் முழுமையாக பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு கட்டணம் உண்டு. பயிற்சி நடைபெறும் இடம். சிஐடியு அலுவலகம். நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ராஹரம்., ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001. பயிற்சி பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

சென்னை மையம்:

திரு. கங்காதரன் - 94442 14696 திரு. வாசுதேவன். 94446 41712

கோயம்புத்தூர் மையம்: திரு. சுரேஷ் - 94881 55191

மாணவர்கள் நம்பிக்கையுடன் கூடிய முயற்சியில் சரியான திட்டமிடலுடன் உறுதியாக தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றியை பெறமுடியும்.

மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்.

ந. வாசுதேவன்.

Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்.

சென்னை - 600001.

தொலைபேசி:

94446 41712

18.05.2022.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot