சர்ச்சை கருத்து: பல்கலை பேராசிரியர் கைது

சர்ச்சை கருத்து:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதியில் சிவலிங்கம் உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, இது தொடர்பான வழக்கை மாவட்ட நீதிபதிக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலை பேராசிரியர் கைது

இதனிடையே, சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், டில்லி பல்கலையின் ஹிந்து பல்கலையில் சமூக அறிவியல் பேராசிரியர் ரத்தன் லால் கருத்து பதிவிட்டதாக புகார் கூறப்பட்டது. இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக டில்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் அளித்த புகாரின் பேரில் டில்லி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரத்தன்லாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Post a Comment (0)
Previous Post Next Post