கல்வித் திருவிழா! வழிகாட்டி நிகழ்ச்சி 24-ல் ஆரம்பம் - உடனே பதிவு செய்யுங்கள்! - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 17, 2022

கல்வித் திருவிழா! வழிகாட்டி நிகழ்ச்சி 24-ல் ஆரம்பம் - உடனே பதிவு செய்யுங்கள்!

கல்வித் திருவிழா!

'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் - கோவை இணைந்து வழங்கும் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் 'வழிகாட்டி' நிகழ்ச்சி, 24ம் தேதி முதல் துவங்குகிறது. என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மெகா கல்வித் திருவிழாவில், 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் துறை வல்லுனர்கள்பங்கேற்று, ஆலோசனை வழங்க உள்ளனர்.

சந்தேகங்களுக்கு தீர்வு

உயர் கல்வி நிறுவனங்களில் 'அட்மிஷன்' நடைபெறுவது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள் எவை, வேலை வாய்ப்பை அள்ளித் தரும் துறைகள்எவை என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கப் படும்.மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் எவை, உதவித் தொகை வாய்ப்புகள் எப்படிஎன்பது உட்பட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏராளமான துறைகள்

சிவில் சர்வீசஸ், கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், துணை மருத்துவம், 'இன்ஜினியரிங், டிசைன், ஆர்க்கி டெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி' உட்பட 20க்கும் மேற்பட்ட துறைகள் குறித்து, துறை சார்ந்த நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர். மேலும், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், 'கிளாட், நாட்டா, கேட்' போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் ஆகியவை பற்றியும் விளக்கப்படும். அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித் தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., - ஐ.சி.டி., நிப்பர், எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ., - ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. கல்வி நிறுவன 'ஸ்டால்'கள்

இந்நிகழ்ச்சியில் பொறியியல், கலை,அறிவியல், மேலாண்மை, கட்டடக் கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம் உட்பட அனைத்து துறை சார்ந்த கல்லுாரி மற்றும் பல்கலைகளின் 'ஸ்டால்'கள் இடம்பெறுகின்றன. பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் ௨ வகுப்பு வரையிலான மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம். சென்னை மற்றும் கோவையை தொடர்ந்து புதுச்சேரி, மதுரை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உடனே பதிவு செய்யுங்கள்!

சென்னையில் கலைவாணர் அரங்கிலும், கோவையில் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திலும், வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை, தினமும் காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தினமும் காலை மற்றும் மாலையில்கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி யில் இலவசமாக பங்கேற்க www.kalvimalar.com என்ற இணையதளத்தில் உடனே பதிவுசெய்யுங்கள்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot