தமிழக பல்கலைகளில் சிண்டிகேட், செனட்டில் தனியார் கல்லுாரி நிர்வாகம் தேவை - கல்வியாளர் பாலகுருசாமி

''தமிழக பல்கலைகளில், சிண்டிகேட் மற்றும் செனட் மன்றங்களில், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக பிரதிநிதி இடம் பெறுவது, நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கும்,'' என, கல்வியாளர் பாலகுருசாமி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பல்கலைகளின் செனட் என்ற ஆட்சி மன்ற பேரவையிலும், சிண்டிகேட் என்ற ஆட்சி மன்ற குழுவிலும், பல்கலைகளின் பேராசிரியர்கள், அரசு கல்லுாரி பேராசிரியர்கள், அரசு மற்றும் கவர்னர் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெறுவர்.அனுமதிஅதிலும், சிண்டிகேட்மன்றத்தில், பல்கலைகளின் இணைப்பில் உள்ள தனியார் கல்லுாரிகளின் நிர்வாகிகள் மற்றும் செயலர்களுக்கு, பிரதிநிதித்துவம் இல்லாத நிலை உள்ளது. அதனால், பல்கலைகளின் நிர்வாக மற்றும் நிதி தொடர்பான முடிவுகளில், தனியார் கல்லுாரிகளின் கருத்துகள் கேட்கப்படாத நிலை உள்ளது.இதை மாற்றும் வகையில், கோவை பாரதியார் பல்கலையின் சிண்டிகேட்டில், தனியார் கல்லுாரிகளின் செயலர்கள் மற்றும் நிர்வாக தரப்பினரை பிரதிநிதிகளாக இடம் பெற செய்ய, கவர்னரிடம் பல்கலை தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.வாய்ப்புஇதற்கு கவர்னர் ஒப்புதல் தரும் பட்சத்தில், தனியார் கல்லுாரி நிர்வாகத்தினருக்கு முக்கியமான பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியதாவது:பல்கலைகளின் சிண்டிகேட் மற்றும் செனட் குழுக்களில், பல்கலைகளில் இணைந்துள்ள தனியார் கல்லுாரிகளின் நிர்வாகத்தினருக்கு பிரதி நிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாகவே உள்ளது. இது பரிசீலினை செய்யப்பட வேண்டிய விஷயம்.பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளின் உறுப்பினர்கள் இடம் பெறும்போது, அந்த பல்கலையின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளின் நிர்வாகம் சார்பில், ஒரு பிரதிநிதி இருப்பது, ஜனநாயக அடிப்படையில் நியாயமான கோரிக்கை. முக்கிய முடிவு மேலும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக பிரச்னைகள் குறித்து, அவர்களின் கருத்துகளையும் பதிவு செய்ய முடியும். சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டத்தில், முக்கிய பிரச்னைகள் குறித்து முடிவு எடுக்கும்போது, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பெற வேண்டும்.அதன்படி, தனியார் கல்லுாரி பிரநிதிகளின் கருத்துகளையும் பதிவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.

இது உயர்கல்வி மற்றும் பல்கலையின் நிர்வாகம் தொடர்பான வெளிப்படைத் தன்மைக்கு வழி வகுக்கும்.பொதுவாக சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டங்களில், அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் தீர்மானங்களே வெற்றி பெறும். அதனால், தனியார் கல்லுாரி நிர்வாகத்தினரின் பிரதிநிதித்துவம், பல்கலையின் முக்கிய முடிவுகளில் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அதேநேரம், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பல்கலை சார்பில் பெறவும், அனைத்து தரப்பு பிரதிநிதிகளின் ஆதரவுடன் ஒரு மனதான தீர்மானங்கள் நிறைவேற்றவும் வாய்ப்பு ஏற்படும். அவற்றை அமல்படுத்துவதிலும் தனியார் கல்லுாரிகள் தரப்பில் எதிர்ப்புகள் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post