1 முதல் 9 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு நடைபெறும்: தமிழக பள்ளிக்கல்வித் துறை

தமிழக பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில்1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று நேற்று அறிவிக்கப்ப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும்1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று தகவல்கள் பரவின.

இறுதித் தேர்வு நடைபெறும்

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, 'தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும். திட்டமிட்டபடி மே 6 முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுத்தாள் தயாரிக்கப்படும். எனவே, தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று தெரிவித்துள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post