மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

மாவட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் \"மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\" அலுவலகத்துக்கு தற்காலிகமாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் (கவுன்சிலர்) மற்றும் சமூக பணியாளர் ஆகிய இரண்டு காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான சம்பளம் விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி போன்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

ஆற்றுப்படுத்துநர் பதிவிக்கான கல்வித்தகுதி (10 + 2 + 3) முறையில் இளங்கலை பிரிவில் உளவியல் / சமூகவியல் அல்லது முதுகலையில் சமூகப் பணி மருத்துவம் அல்லது மனநலம் ஆற்றுப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் ஆற்றுப்படுத்துதனர் (கவுன்சிலர்) தொழிலில் (குழந்தைகள் சார்ந்து) 2 வருடம் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். இதற்கான வயது வரம்பு-40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக பணியாளர் பதவிக்கான கல்வித்தகுதி பட்டதாரி, பட்டதாரி முதுநிலை (10 + 2 + 3) முறையில் சமூகப் பணி, உளவியல் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பாடங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பட்டம் பெற்றிருப்பவர்களாக இருத்தல் வேண்டும். குழந்தைகள் நலன் சார்ந்த பணியில் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு-40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம், (namakkal.nic.in ) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக முகவரிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment (0)
Previous Post Next Post