பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Thursday, November 18, 2021

பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு

பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு

செ.வெ.எண்.322; நாள். 17.11.2021

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

நவம்பர் 18.11.2021 அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் அனைத்து அலுவலர்களும் அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ள மேற்கொள்ளவும், தேவையான அனைத்து கனமழையை முன்னெச்சரிக்கை எதிர்கொள்ள தயார் நடவடிக்கைகளை நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிக கனமழையின் காரணமாக மழைநீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் தேவையான காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மழைப்பொழிவு உள்ள நேரங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள், நீர்வழிக் கால்வாய்கள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களின் அருகில் செல்பி புகைப்படம் எடுக்கக் கூடாது. தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்புப் பெட்டிகளை தொடுதல் அல்லது மரங்களின் கீழ் நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்கின்ற உதவி எண்ணிலும், 044-25619204, 044. 25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற தொலைபேசி எண்களிலும் மற்றும் 9445477205, 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot