ரூ.52,549 கோடி முதலீட்டில் புதிய தொழில்கள்; 92 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு.!

முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்ற தலைப்பில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான மாநாடு கோவையில் நேற்று நடந்தது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 59 நிறுவனங்கள் ரூ.35,208 கோடி முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மேலும், ரூ.3,928 கோடியில் புதிய தொழிற்சாலைகளை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.33,413 கோடியில் 13 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 92 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்றுமுன்தினம் கோவை வந்தார். முதல்நாள் கோவையில் நடந்த விழாவில் ரூ.1,200 கோடி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை திருப்பூரில் நடந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.41 லட்சத்தில் இரண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நேற்று இரவு கோவை திரும்பிய மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை 11 மணிக்கு கோவை கொடிசியா அரங்கில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு’ என்ற முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் ரூ.34,723 கோடி முதலீட்டில் 74,835 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. அதன்படி, கோவை, செங்கல்பட்டு, விருதுநகரில் டால்மியா பாரத் கிரீன் விஷன் லிமிடெட் சார்பில் சிமென்ட் தயாரிப்பு கம்பெனி, அதானி என்டர்பிரைசஸ் சார்பில் சென்னையில் தகவல் தரவு மையம், காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொழிற்பூங்கா, சென்னை, காஞ்சிபுரத்தில் தகவல் தரவு மையம், டிவிஎஸ் மோட்டார் சார்பில் கிருஷ்ணகிரியில் மின் வாகனங்கள் தயாரிப்பு, அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் சார்பில் கரூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டையில் சிமென்ட் உற்பத்தி ஆலை, பெருந்துறையில் மருத்துவ கையுறைகள், கோவையில் மின்சார ஸ்கூட்டர்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசியில் பல்நோக்கு மருத்துவமனை, ஈரோட்டில் பால் பொருட்கள், சிப்காட் பெருந்துறை மற்றும் திருப்பூரில் குழந்தைகளுக்கான துணிகள், சென்னையில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் சார்பில் உணவு பொருட்கள், காஞ்சிபுரத்தில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் காற்றாலை, மோட்டார் வாகனங்களுக்கான குளிர்பதன வசதி, ஆயத்த ஆடைகள் என 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும், ரூ.485 கோடி முதலீடு மற்றும் 1,960 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 7 வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதன்படி மொத்தம் ரூ.35,208 கோடி முதலீட்டில் 76,795 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. அடுத்து, டிட்கோ நிறுவனம் தயாரித்துள்ள மாநிலத்தில் உள்ள வான்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேடு ஒன்றினையும் முதல்வர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின்போது ரூ.13,413 கோடி முதலீட்டில் 11,681 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 13 திட்டங்களுக்கு முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன்படி, காஞ்சிபுரத்தில் சூரிய ஒளி உற்பத்தி மற்றும் தகவல் தரவு மையம், சிப்காட் ஒரகடம் காஞ்சிபுரத்தில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், செங்கல்பட்டில் தகவல் தரவு மையம், திருநெல்வேலியில் உணவு பொருட்கள், காஞ்சிபுரத்தில் லித்தியம் அயன் மின்னேற்றுகள், திருநெல்வேலியில் பேப்பர் பொருட்கள், காஞ்சிபுரத்தில் காற்றாலை பிளேடு கியர்பாக்ஸ், நாமக்கல்லில் நூற்பு ஆலைகள், காஞ்சிபுரத்தில் டிரோன்கள், விருதுநகரில் நூற்பு ஆரோகள், காஞ்சிபுரத்தில் டயர் இயந்திரங்கள் உற்பத்தி, சிப்காட் ராணிப்பேட்டையில் ஏபிஐ உள்ளிட்ட 13 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அடுத்து, ரூ.3,928 கோடி முதலீட்டில் 3,944 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 10 திட்டங்களின் வணிக உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேற்கூறிய 82 திட்டங்களின் மூலம் ரூ.52,549 கோடி முதலீட்டில் 92,420 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிட வகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்
Post a Comment (0)
Previous Post Next Post