தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கொள்குறி வகைக்கான கணினி வழி தேர்வு, துறைத்தேர்வுகள் - மே 2021 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துறைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஆதார் எண்ணை கட்டாயமாகப் பதிய வேண்டும். டிசம்பர் - 2021-ற்கான துறைத்தேர்வுகள் 01.02.2022 முதல் 09.02.2022 தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை வரை 22.11.2021 முதல் விண்ணப்பிக்கலாம்.
இணைய தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள் 21.12.2021 அன்று 11.59 பிற்பகல் வரை. அனைத்து கொள்குறி வகை தேர்வுகளும் (100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 40 சதவீதம் / 60 சதவீதம் / 80 சதவீதம்) கணினி வழி முறையிலும் அனைத்து விரிந்துரைக்கும் வகை தேர்வுகளும் (100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 20 சதவீதம் | 40 சதவீதம் / 60 சதவீதம்) ஏற்கனவே உள்ள முறையான தேர்வுத் தாளில் எழுதும் வகை தேர்வாக நடைபெறும். வணிகவரித்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் இணைப்பு II-ல் வெளியிடப்பட்டுள்ளது.
துறைத்தேர்வு விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் / பாடத்திட்டம் / தேர்வு அமைப்பு முறை / தேர்வின் பெயர் / தேர்வு குறியீடு / தேர்வுகளுக்கான கட்டணம் / கால அட்டவணை போன்றவை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in /
www.tnpscexams.net-ல் கிடைக்கப்பெறும். செ.ம.தொ.இ/1058/வரைகலை/2021