B.V.Sc., B.Tech., உள்ளிட்ட கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

B.V.Sc., B.Tech., உள்ளிட்ட கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை tanuvas.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

NRI மாணவர்கள் நாளை முதல் நவம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை - 600 051 2021-2022 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை (பிவிஎஸ்ஸி & ஏஎச் மற்றும் பிடெக்) செய்தி குறிப்பு

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான (கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH), உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Food Technology), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Poultry Technology) மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Dairy Technology) ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 09.09.2021 காலை 10.00 மணி முதல் 08.10.2021 மாலை 6.00 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்படுகின்றன.


அயல்நாடு வாழ் இந்தியர் (NRIS) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) மாணவர்கள் 09.09.2021 காலை 10.00 மணி முதல் 08.11.2021 மாலை 6.00 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை (Online application) சமர்ப்பிக்கலாம்.


இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றம் இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் காணலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post