அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கான கடந்த 2021 மே மாதம் நடைபெற்ற தோ்வுகளுக்கு, அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


இளங்கலை பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொது நிா்வாகம், பொருளாதாரம், பி.லிட்., பி.காம். மற்றும் நேரடி இரண்டாமாண்டு, பி.காம்., கணினி பயன்பாட்டியல் மற்றும் நேரடி இரண்டாமாண்டு, பி.சி.ஏ., நேரடி இரண்டாமாண்டு பி.பி.ஏ., நேரடி இரண்டாமாண்டு, பி.பி.ஏ. வங்கியியல், நேரடி இரண்டாமாண்டு பி.எஸ்சி. கணினி அறிவியல், நேரடி இரண்டாமாண்டு, பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம், நேரடி இரண்டாமாண்டு பி.எஸ்சி. உளவியல், பி.எஸ்சி. கணிதம், பி.எட்., பி.லிப். ஐ.எஸ்சி (நூலக மற்றும் தகவல் அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகள்.


முதுகலை எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், மனிதவள மேலாண்மை மற்றும் தொழில் உறவியல் மற்றும் நேரடி இரண்டாமாண்டு குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியியல், எம்.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உளவியல், நுண்ணுயிரியியல், மனை அறிவியல் - ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, எம்.சி.ஏ., நேரடி இரண்டாமாண்டு எம்.காம்., எம்.காம். நிதி மற்றும் கட்டுப்பாடு, எம்.காம். (ஐ.எம்), எம்.பி.ஏ. பொது, எம்.பி.ஏ. பன்னாட்டுத் தொழில், வங்கியியல் மற்றும் நிதி, நிறுமச் செயலரியல், திட்ட மேலாண்மை, மருத்துவ நிா்வாகம், மனிதவள மேலாண்மை, சுற்றுலா மேலாண்மை, கல்வி மேலாண்மை, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த மேலாண்மை, சில்லறை மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, இடப்பெயா்வு மேலாண்மை, நிறும மேலாண்மை, நிதியியல் மேலாண்மை, சந்தையியல் மேலாண்மை, கணினி மேலாண்மை, உற்பத்தி மற்றும் செயல்பாடுகள் மேலாண்மை, கூட்டுறவு மேலாண்மை, கப்பல் வாணிபம் மற்றும் துறைமுக மேலாண்மை, எம்.லிப்.ஐ.எஸ்சி. (நூலக மற்றும் தகவல் அறிவியல்), எம்.சி.எஸ்., எம்.எஸ்சி. (5 ஆண்டு ஒருங்கிணைந்த மென்பொருள் பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகள்.


முதுநிலை பட்டயப் பிரிவு (பி.ஜி. டிப்ளமோ) கணினி பயன்பாட்டியல், பணியாளா் மேலாண்மை மற்றும் தொழில் உறவு, மருத்துவ நிா்வாகம், மனிதவள மேலாண்மை, தொழில் மேலாண்மை, விளையாட்டு மேலாண்மை, யோகா பாடப் பிரிவுகளுக்கும் மற்றும் இளநிலை பட்டயப் பிரிவு மாண்டிசோரி எஜுகேஷன், டிசிஏ, ஆா்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மெஷின் லோ்னிங் செக்யூரிட்டி, மருத்துவ மேலாண்மை, சான்றிதழ் பிரிவு சி.எல்.ஐ.எஸ். வலை வடிவமைப்பு, ஜி.எஸ்.டி., ஜோதிடவியல், ஜெண்டா் ஸ்டடீஸ், சிப்ரோகிராம், கணினி அடிப்படைவியல், ஆஃபீஸ் ஆட்டோமேஷன் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள், விடைத்தாள் நகல் பெற்று விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்ற 7 நாள்களுக்குள் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.500 வரைவோலையுடன் விண்ணப்பிக்கவேண்டும். விடைத்தாள் நகல் பெறாமல் நேரடியாக விண்ணப்பிப்போா் முடிவு வெளியான 7 நாள்களுக்குள் ரூ.600 வீதம் இணையவழி வாயிலாக மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று, தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் தெரிவித்துள்ளாா்.
Post a Comment (0)
Previous Post Next Post