கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் இறப்பின் காரணம் திருப்தி இல்லையெனில், மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு கொரோனா இறப்புகளுக்கு அதிகாரபூர்வ ஆவணப்படிவம் பெற்றுக்கொள்ளலாம் - பொது சுகாதாரத்துறை இயக்குனரகம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் இறப்பின் காரணம் திருப்தி இல்லையெனில், மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு கொரோனா இறப்புகளுக்கு அதிகாரபூர்வ ஆவணப்படிவம் பெற்றுக்கொள்ளலாம்

- பொது சுகாதாரத்துறை இயக்குனரகம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை


பிறப்பு, இறப்பு மற்றும் இறந்து பிறந்தவை, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம், 1969-ன் படி கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். மேற்கண்ட பதிவுச் சட்டம் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள், 2000-ன் படி மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தமிழ்நாட்டின் முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் ஆவார். மாநிலம் முழுவதும் பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தை அமல்படுத்திடும். அதிகாரம், முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.


கோவிட் காரணமாக இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இறப்பின் காரணம் கோவிட் எனக் குறிப்பிட்ட அதிகாரபூர்வ ஆவணம் (OFFICIAL DOCUMENT FOR COVID-19 DEATH) வழங்குவதற்கான எளிமையான வழிகாட்டுதல்களை வழங்கிட உச்சநீதிமன்ற வழக்கு எண். Writ Petition (Civil) No. 539 & 554 of 2021 தீர்ப்பாணை நாள். 30.06.2021-ல் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய சுகாதாரத் துறை (பேரிடர் மேலாண்மை குழு) கடித எண். F.No.C.18018/11/2021-DM Cell, நாளிட்ட 03.09.2021 கடிதத்தின் படி அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர்களுக்கு (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை) மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் குழு அமைத்து கோவிட்-19 இறப்பு குறித்து பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து அதிகாரபூர்வ ஆவணப்படிவம் கோவிட்-19 இறப்புகளுக்கு வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட உச்சநீதிமன்ற ஆணையின் படியும் மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் மாவட்ட அளவில் குழு அமைத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களுக்கு நடவடிக்கை எடுத்திட தமிழக அரசு கடித எண். 33211/P1/2021-1, நாளிட்ட 08.09.2021 -ன் படி அறிவுரை வழங்கியுள்ளது.


இறப்பின் காரணம் குறித்த மருத்துவ சான்றிதழ், மத்திய பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969, பிரிவு 10(3)- ன் படி எந்த நபர் அவர் கடைசியாக நோயுற்றிருந்த போது மருத்துவ தொழிலாற்றுனரால் சிகிச்சை அளிக்கப்பட்டாரோ அந்த நபரின் இறப்பிற்கு பின்பு இறப்பின் காரணம் குறித்த மருத்துவ சான்றிதழ் இச்சட்டவிதிப்படி நேர்வுக்கு ஏற்ப படிவம் 4/4அ வழங்கப்பட வேண்டும். இப்படிவத்தினை பிறப்பு இறப்பு பதிவாளரிம் இறப்பு குறித்து தகவல் அளிக்கும் படிவத்துடன் இனணத்து அளிக்கப்பட வேண்டும்.


மேலும், மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் மேற்கண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பாணையின்படி அனைத்து பிறப்பு இறப்பு பதிவாளர்களும் இறப்பின் காரணம் குறித்த மருத்துவ சான்றிதழ் (படிவம் 4/4அ ) நகலினை இறந்தவரின் குடும்ப உறுப்பினர் அணுகும் பட்சத்தில் வழங்கிட அனைத்து மாநில முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர்களுக்கு இந்திய தலைமைப் பதிவாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தின் முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் அனைத்து பிறப்பு இறப்பு பதிவாளர்களுக்கும் ந.க.எண்.65878/S8HI-U/S12021/. நாளிட்ட 09.09.2021 கடிதத்தில் இறப்பின் காரணம் குறித்த மருத்துவ சான்றிதழின் நகலினை குடும்ப உறுப்பினர் பதிவாளரை அணுகும் பட்சத்தில் அளித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இறப்பின் காரணம் குறித்த மருத்துவ சான்றிதழ் பெறப்படாத இறப்பு பதிவுகள் மற்றும் பிறப்பு இறப்பு பதிவாளரிடம் பெறப்பட்ட இறப்பின் காரணம் குறித்த மருத்துவ சான்றிழில் குறிப்பிட்டுள்ள இறப்பின் காரணம் திருப்தி அளிக்காவிடில் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு கோவிட் 19 இறப்புகளுக்கு அதிகாரபூர்வ ஆவணப்படிவம் பெற்றுக்கொள்ளலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post