கரோனா தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவினால் இன்று பலரும் ஸ்தம்பித்துப் போயுள்ளனர். இந்த கரோனா காலத்தில் வேலையைத் தக்கவைத்துக்கொண்டவர்கள், ஓரளவு வருமானம் ஈட்டுவோர் பாக்கியவான்களே. ஏனெனில் மறுபுறம் வேலையை இழந்தோர், வருமானம் குறைவாகப் பெறுதல், அன்றாட வியாபாரம் மூலமாக சாப்பிடும் சாலையோர வியாபாரிகள் என பலரது பொருளாதாரத்தை சிதைத்துள்ளது கரோனா காலம்.
இந்த நிலையில், வரவுக்கு அதிகமாக செலவு இருக்கிறது, எவ்வளவு சிக்கனப்படுத்தினாலும் சேமிக்க முடியவில்லை என்று கூறுவோருக்கு சேமிப்புத் திறனை மேம்படுத்த சில எளிய குறிப்புகள்...
பட்ஜெட்
கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் மாதந்தோறும் பட்ஜெட் என்று ஒன்று இருக்கும். மாதாந்திர பட்ஜெட் நிலவரத்தை கண்டிப்பாக மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும். செலவு செய்தவற்றை எழுதிவைத்து மாத இறுதியில் எது தேவையுள்ள செலவு, தேவையற்ற செலவு எனப் பிரித்து அடுத்தடுத்த மாதங்களில் தேவையற்ற செலவுகளைத் தவிருங்கள். பணம் மிச்சமாகும்.
கடன்கள்
இரண்டாவதாக, கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை கண்காணியுங்கள். வழக்கமான செலவுகளைத் தவிர்த்து இவையெல்லாம் கூடுதல் செலவுகள் என்பதால் அதனை கண்காணித்து அதற்கேற்ப மற்ற செலவுகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
உங்கள் கிரெடிட் கார்டில் நிலுவையில் உள்ள வட்டி மற்றும் மாதாந்திர திருப்பிச் செலுத்தும் அட்டவணையை உருவாக்கி சரியான நேரத்தில் செலுத்த திட்டமிட்டு கடனை அடையுங்கள். கடனை செலுத்துவதற்கு உங்கள் இதர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் இந்த கடனை அடைக்க வேறு ஒரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
ஷாப்பிங்
உங்கள் ஷாப்பிங் பட்டியலில் மளிகை அல்லது பிற பொருள்களின் தேவைகள் குறித்துப் பாருங்கள். சிலர் தேவைக்கு அதிகமாக வாங்கி பின்னர் வீணாக்கலாம். எனவே, தேவையான பொருள்களை மட்டும் அளவோடு வாங்கலாம். உதாரணமாக சூப்பர் மார்க்கெட்டில் சென்று பார்ப்பதையெல்லாம் கூடையில் எடுத்துப்போடுவதைவிட வீட்டில் இருந்து அவசியம் தேவையான பொருள்களை மட்டும் லிஸ்ட் போட்டு எடுத்துச் செல்லுங்கள். பட்ஜெட் தொகையையும் குறைத்துக்கொள்ளுங்கள். லிஸ்டில் வாங்கியதுபோக மீத பணம் இருந்தால் மட்டுமே வேறு பொருள்களை வாங்க வேண்டும் என்று கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். இதுதவிர, ஆடைகள், ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், ஆடம்பரப் பொருள்கள் வாங்குவதைக் குறைத்தால் சேமிப்பு கிடைக்கும்.
வீட்டில் இருந்து வேலை
கரோனா தொற்றினால், பெரும்பாலோர் வீட்டிலிருந்து வேலை செய்வதால் அதிக வருமானத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளைப் பாருங்கள். வேலை நேரம் தவிர பிற நேரங்களில் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம். குறிப்பாக உங்கள் திறமைகளின் அடிப்படையில் கிடைக்கும் வணிக வாய்ப்புகளை மூலதனமாக்குங்கள். பகுதிநேர வேலை உங்கள் மாத வருமானத்தை அதிகரிக்கலாம். உங்களுடைய கல்வி, தகுதிக்கு ஏற்றவாறு பகுதிநேர வேலையாக சிலவற்றை செய்துகொடுப்பதன் மூலமாக பணம் ஈட்டலாம்.
சேமிப்பின் இறுதி வழி
இறுதியாக, 6 மாதங்கள் பட்ஜெட்டை கவனித்த பின்னரும் சேமிப்பு கொஞ்சம் கூட கிடைக்கவில்லை எனில், சில செலவுகளை தவிர்ப்பது மட்டுமே சாத்தியமாகும். அத்தியாவசியத் தேவைகள் தவிர ஆடம்பரத் தேவைகளை சில மாதங்களுக்கு முற்றிலுமாகத் தவிர்த்துவிடுங்கள்.
உதாரணமாக மளிகைப் பொருள்கள் இல்லாமல், வீட்டிற்குத் தேவையான இதர பொருள்கள் வாங்குவதைத் தள்ளிப்போடலாம். வாரத்திற்கு இருமுறை ஹோட்டலுக்குச் சென்று குடும்பத்துடன் சாப்பிடுகிறீர்கள் என்றால் அதனை ஒருமுறையாக அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாக குறைத்துக்கொள்ளுங்கள். இதுமாதிரி உங்களுடைய செலவுகளில் எவற்றையெல்லாம் தவிர்க்க, குறைக்க முடியுமோ அவ்வாறு செய்தால் சேமிப்பு கிடைக்கும்.
சேமிப்பே பலம்
சிறிதளவு சேமிப்பேனும் இக்கட்டான சூழ்நிலையில் பெரும் பயனைத் தரும் என்பது அனைவரும் அறிந்ததே. திடீரென குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவு என்று வரலாம். எனவே, சிறிதளவேனும் சேமித்து வையுங்கள். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மட்டுமே அந்த சேமிப்பு தொகையை எடுக்க வேண்டும் என்றும் நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.
தேவையில்லாத செலவுகளைக் குறைத்தும், திறமையைப் பயன்படுத்தி நேர்மையான முறையில் பல வழிகளிலும் பணத்தை ஈட்டலாம். குறைந்தபட்சம் செலவுகளைக் குறைத்து கடன் வாங்குவதையாவது குறைத்துக்கொள்ளுங்கள்.
சேமிப்பு உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கும். இதனால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.