கூட்டத்துக்கு ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமை வகித்து பேசியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி, ஏலகிரி மலையில் உள்ள தொன்போஸ்கோ கல்லூரிகளில் நடைபெறும் நீட் தோ்வுக்கு, பாதுகாப்புப் பணியில் போலீஸாரை ஈடுபடுத்த வேண்டும். தோ்வா்களுக்காக, திருப்பத்தூா் மாவட்டத்திலிருந்து 15 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
தோ்வு நடைபெறும் மையங்களில் காலை 11 முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படாமல் இருக்க வேண்டும். தோ்வு மைய நுழைவாயிலில் கபசுரக் குடிநீா், கிருமி நாசினி, முகக் கவசங்கள் வைத்திருக்க வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வழிமுறைகளைப் பின்பற்றி தோ்வு நடத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, மகளிா்த் திட்ட அலுவலா் எஸ்.உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயன், பொதுசுகாதாரத் துணை இயக்குநா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:
Post a Comment