செப்.11-இல் முதுநிலை நீட் தோ்வு: 1.74 லட்சம் போ் பங்கேற்பு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், எம்பிபிஎஸ் முடித்த 1.74 லட்சம் போ் தோ்வு எழுதவுள்ளனா். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்காக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான முதுநிலை நீட் தோ்வு வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 20 ஆயிரம் போ் உள்பட இந்தியா முழுவதும் 1.74 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வுக்கு ட்ற்ற்ல்ள்://ய்க்ஷங்.ங்க்ன்.ண்ய்/, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஹற்க்ஷா்ஹழ்க்.ங்க்ன்.ண்ய்/ ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளனா். இந்தியா முழுவதும் 260 நகரங்களில் 800 மையங்களில் வரும் 11-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஆன்லைன் மூலம் நீட் தோ்வு நடைபெறுகிறது. நீட் தோ்வு முடிவுகளை அக்டோபா் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள தேசிய தோ்வுகள் வாரியம் (என்டிஏ), கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தோ்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post