தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - பத்திரிக்கை செய்தி - 07-09-2021

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,

ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் 13 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளீர்கள். அதனை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அகமகிழ்ந்து வரவேற்கிறோம்.

1.1.2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2022 ஏப்ரல் மாதம் முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை திரும்பபெற வேண்டும். அதுபோல் பங்களிப்பு ஓய்வுதியம் ரத்து, போராட்டக்காலத்தினை பணிக்காலமாக கருதி பணிவரன்முறை செய்ய வேண்டும் 24.8.21 தேதியில் மாண்புமிகு தமிழக என முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கை வைத்திருந்தோம். அதன்படி தற்போது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த காலத்தில் இருந்து அகவிலைப்படி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும் முதல்வரின் இந்த அறிவிப்பு சற்று ஆறுதலை தருகிறது. முதல்வரின் இந்த அறிவிப்பினை வரவேற்கிறோம். விடுபட்ட அகவிலைப்படி நிலுவையினை பொருளாதார நிலை சீரடைந்தவுடன் மீண்டும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


அதுபோல் வேலை நிறுத்த போராட்ட காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தினை பணிக்காலமாக கருதி முறைபடுத்த வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட பதவி உயர்வு, மணிமாறுதல் இவைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதுபோல் போராட்ட காலத்தில் தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகள் காவல்துறையால் இதுவரை கைவிடப்படாமல் உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களில் விசாரணையும் நடைபெற்று கிறது. இதனையும் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.


உயர்கல்வி படித்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க ஒன்றிய அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலோடு உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாண்புமிகு முதல்வர் அறிவித்துள்ளார். அதில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் என்ற நிலைபாடு இல்லாமல் தமிழக அரசின் ஊக்க உணர்வோடு அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், அனைத்து வகையான உயர்படிப்புகளுக்கும் ஊக்க ஊதியம் கிடைக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து அனைவரும் பலனடையும் வகையில் அறிவிப்பு செய்திட வேண்டும். அதுபோல் உயர்கல்வி படித்து பின்னறேப்பு கேட்டு பல ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். இதனையும் ஏற்று அனைவருக்கும் பின்னேற்பு வழங்க வேண்டும்.


அரசு பணியாளர்களுக்கான மருத்துவகாப்பீடு திட்டம் சார்ந்து வாழும் மகன், மகள் ஆகியோருக்கு வயது வரம்பை கருத்தில் கொள்ளாமல் பயன்பெற ஆணை பிறப்பிக்கப்படும் என்ற அறிவிப்பினை வரவேற்கிறோம். இத்திட்டத்தில் ஊழியர்களை சார்ந்து வாழும் பெற்றோர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவு படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். காப்பீடு தொகை பெறுவதில் உதவிடும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வரவேற்கிறோம். இத்திட்டத்தில் காப்பீடு தொகை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. இதனை முழுமையாக சரி செய்யும் வகையில் அதிகாரம் கொண்ட உதவி மையம் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 58 இருந்து 60 ஆக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றப்படும். என்பது உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வரவேற்கிறோம்.

இதுபோல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பனிய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்ற ஏராளமான கோரிக்கைகள் உள்ளன. இதனை நிறைவேற்றும் வகையில் சங்கங்களை அழைத்துப்பேசி தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதையும் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் பணிவான வேண்டுகோளாக வைக்கிறோம். இது எங்களின் அரசு என்ற உரிமையுடன் காத்திருக்கிறோம் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

1 Comments

  1. Dai part time teacher nu oru group iruku theriyumaa, ungaluku kedakavendiuadu kedacha podum, avaga epadi pona enna, ada da ungaluku kolutha bagiyanea irukradu elaa

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post