1 முதல் 12 ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடம்

1 முதல் 12 ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடம்

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வியை கட்டாய பாடமாக்கவேண்டும் என வலியுறுத்தி மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழு நீதியரசர் முருகேசனி டம் உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்த னர்.

தமிழகத்தில் கல்வித்து றையை சீரமைக்க மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான உயர் மட்டக்குழுவை நீதியரசர் முருகேசன் தலைமையில் தமிழக அரசு அமைத்துள் ளது. இந்தக் குழுவினர் பல்வேறு கல்வியாளர்கள், கல்விச்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் கருத்து கேட்டு வருகின்ற னர். உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்கு நர் சங்க மாநில தலைவர் தேவி செல்வம், பொதுச் செயலாளர் பெரியதுரை மற்றும் நிர்வாகிகள் உயர் மட்டக் குழுவை சந்தித்து மனு அளித்து தங்கள் கருத் துக்களை தெரிவித்தனர்.

அவர்கள் அளித்தமனு வில் கூறியிருப்பதாவது:

தற்போதைய கல்விக் கொள்கையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உடற்கல்வி பாடமும், உடற் கல்வி ஆசிரியர் நியமன மும்இல்லை. குழந்தை பரு வம்5வயது முதல் 10 வயது வரை உடற்கல்வி மூலமாக உடல் இயக்கங்களையும், அதன் செயல்பாடுகளை யும் கற்கவும், விளையாட்டு அடிப்படை விதிகளை தெரிந்து கொண்டு விளை யாடவும் வாய்ப்பு வழங்க வேண்டும். இளம் வளரும் குழந்தை பருவமாகிய 5 மதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடற் கல்வி போதிக்கவும், விளையாட்டு பயிற்சி அளிக்கவும் உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். தற்போதைய கல்வி முறையில் உடற் கல்வி பாடமும், அதை கற் றுக்கொடுக்க உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. இந்த நிலை தொடராமல் இருக்க மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண் டும்.

6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்கி, 10ம் வகுப்பு பொதுத்தேர் வில் உடற்கல்வி பாடத் திற்கு 50:50 விகிதத்தில் எழுத்து தேர்வும், செய் வேண்டும். முறை தேர்வும் இடம் பெற செய்ய வேண்டும்.

அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி இயக்குனர் நிலை 2 பணி யிடம் வழங்க வேண்டும்.

தற்போதைய கல்வி முறையில் உடற்கல்வி பாடவேளை வாரத்திற்கு 2 மட்டுமே உள்ளது. இதை உயர்த்திதினமும் ஒரு உடற் கல்வி பாடவேளை ஒதுக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு ஏக்கர் விளையாட்டு மைதானம் கட்டாயம் இருக்க வேண் டும். உயர்,மேல்நிலைப்பள் ளிகளில் 3 முதல் 5 ஏக்கர் அளவில் விளையாட்டு மைதானம் இருக்க வேண் டும். விளையாட்டு மைதா னம் பள்ளி வளாகத்தில் அல்லது அருகே அரசு ஏற் பாடு செய்ய வேண்டும்.

விளையாட்டு போட்டி களுக்கு செல்லும் மாண வர்களுக்கு பஸ் மற்றும் ரயில்களில் இலவசமாக செல்ல அனுமதி அளிக்க வேண்டும். அல்லது தனி யாக நிதி ஒதுக்கீடு செய்து உடற்கல்விக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி பாடத்திட்டம், பாடக்கு றிப்புகளை அரசு வழங்க இவ்வாறு தெரிவித் துள்ளனர்.

Post a Comment (0)
Previous Post Next Post