தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல்: 7 மாணவர்கள் 200க்கு 200 பெற்று முதலிடம் - Tamil Nadu Agricultural University Rank List: 7 students topped with 200 out of 200

தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல்: 7 மாணவர்கள் 200க்கு 200 பெற்று முதலிடம் - Tamil Nadu Agricultural University Rank List: 7 students topped with 200 out of 200

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை அதன் துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வெளியிட்டார். 7 மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த கல்வியாண்டில் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில் மொத்தம் 8 ஆயிரத்து 980 மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ம் வரை பெறப்பட்டது.

இதில், அரசு கல்லூரிகளில் ஒற்றை சாளர கலந்தாய்வின் மூலம் 2 ஆயிரத்து 567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைப்புக் கல்லூரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் 2 ஆயிரத்து 858 இடங்களும், நிர்வாக இட ஒதுக்கீட்டின் மூலம் 1,545 இடங்கள் என மொத்தம் 4,413 இடங்கள் நிரப்பபடவுள்ளன.

தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 247 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 120 இடங்களும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் மற்றும் 20 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 15 ஆயிரத்து 111 பேர் மாணவர்கள், 24 ஆயிரத்து 378 பேர் மாணவிகள் ஆவர்.

சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 301 மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 7,773 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் 144 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் 1,849 மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிரிவில் 808 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். பழங்குடியினர் பிரிவில் மட்டும் 596 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று (செப்டம்பர் 30) வெளியிட்டார். 7 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்ற முதலிடம் பிடித்துள்ளனர். அதில், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தலா 2 மாணவர்கள், சேலம், ராமநாதபுரம், தர்மபுரி சேர்ந்த தலா மாணவர்கள் என மொத்தம் 7 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 199.5 மதிப்பெண் 14 பேர், 199 மதிப்பெண் 3 பேர் பெற்றுள்ளனர்.

மேலும், 513 பேர் 195 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம். கடந்த ஆண்டு 195 மதிப்பெண்ணுக்கு மேல் 161 பேர் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் வேளாண் கட்ஆப் மதிப்பெண் 200 முதல் 185.5 மதிப்பெண் வரை இருந்தது. தனியார் கல்லூரியில் 179 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது. தொழிற்கல்வியில் 181 மதிப்பெண் கட்ஆப் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வு நடைமுறை தொடங்கப்படும். கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு நேரடியாக நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக கலந்தாய்வு தொடர்பாக யூடியூப்பில் தவறான தகவல் பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
Post a Comment (0)
Previous Post Next Post