இதுவரை இல்லாத சரிவை சந்தித்துள்ள IIT கட்ஆஃப் மதிப்பெண்கள்
IIT கல்வி நிலையங்களில் நடப்பாண்டில் பொதுப் பிரிவினருக்கான கட்ஆப் 360க்கு 55 மதிப்பெண்கள் என்பது இதுவரை இல்லாத குறைந்தபட்ச கட்ஆஃப் ஆகும். இந்த தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
IIT கட்ஆஃப்:
நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி நிலையங்களின் நுழைவு தேர்வு முடிகள் ஞாயிற்று கிழமையான நேற்று வெளியிடப்பட்டது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு மிகவும் கடுமையாக இருந்ததாகவும், தொற்று பரவல் காலத்தில் மாணவர்கள் சந்தித்த மோசமான தாக்கம் காரணமாகவும் மாணவர்களின் கட்ஆஃப் மதிப்பெண்கள் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொதுப் பிரிவினருக்கு 360க்கு 55 மதிப்பெண்கள் தான் நடப்பாண்டில் ஐஐடியில் சேர்க்கைக்கான தகுதியாக உள்ளது. இது இதுவரை இல்லாத குறைந்தபட்ச கட்ஆஃப் ஆகும்; கடந்த ஆண்டு கட்ஆஃப் 63 ஆகவும் இருந்தது.
குறிப்பாக, தற்போதைய மாணவர்களில் பெண்கள் கடந்த ஆண்டை விட ஏழு பேர் முதல் 100 இடங்களில் இடம் பிடித்துள்ளனர். டெல்லி – ஐஐடி முதல் 500 ரேங்க்களில் அதிக மாணவர்களைக் கொண்டுள்ளது. ஐஐடி-மெட்ராஸ் அதிக எண்ணிக்கையிலான முதல் 10 இடங்களை சேர்ந்த மாணவர்களை கொண்டுள்ளது. ஐஐடி- மும்பை முதல் 10 இடங்களில் மூன்று மாணவர்களுடன் முதல் 500 தரவரிசையில் மூன்றாவது அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஆண்டிலும், வெளியான 23 IIT கல்வி நிலையங்களுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகளில் ஒரு மும்பை மாணவர் கூட முதல் 10 ரேங்க்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 5 ஆகும். மொத்தம் 40,712 விண்ணப்பதாரர்கள் JEE (A) க்கு தகுதி பெற்றுள்ளனர், அதில் 6,516 பேர் பெண்கள். 1.2 லட்சம் அல்லது 78.4% ஆண் வேட்பாளர்களில், 34,196 அல்லது 28% பேர் தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 6,516 ஆக இருந்தது. கல்லூரிகள் முழுவதும் பெண்களுக்கான கூடுதல் இடங்கள் 2018ல் 14% இல் இருந்து கடந்த ஆண்டு 20% ஆக படிப்படியாக அதிகரித்தது. இளங்கலைப் படிப்பிற்காக IITஐ பெண்கள் தேர்வு செய்ய அவர்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பக் கல்வியில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் பெண்களுக்கான கூடுதல் 20% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மற்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.