பள்ளிகளில் மாணவர்களை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்த கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்தது. இந்நிலையில் பொறுப்பற்ற பள்ளிக்கல்வித்துறையின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்ட பள்ளிநிர்வாகம் மாணவர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை கவனத்தில் எடுத்து மீண்டும் இதுபோன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்