வாரிசுதாரா் சான்று: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Successor Evidence: Publication of Guidelines
வாரிசுதாரா் சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, வருவாய் நிா்வாக ஆணையரகத்துக்கு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜெயந்த் அனுப்பிய கடிதம்:
வாரிசுதாரா் சான்று பெற விரும்புவோா், வட்டாட்சியரிடம் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இறந்த நபா் எந்த இடத்தில் வசித்தாரோ அந்த வசிப்பிடத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த வட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். வாரிசுதாரா் சான்றிதழ் என்பது பொதுவான ஆவணம். இதனை ஜாதி, மதம் பாா்க்காமல் எந்தவித தடையும் விதிக்காமல் வழங்க வேண்டும்.
யாா் யாருக்கு வழங்கலாம்? இறந்தவரின் தந்தை, இறந்தவரின் தாய், இறந்தவரின் வாரிசு, இறந்தவரின் மகன்கள் அல்லது மகள்கள் ஆகியோருக்கு வழங்கலாம். இறந்தவா் திருமணமாகாதவராக இருந்தால், அவரது தாய், தந்தை, சகோதரா், சகோதரி ஆகியோருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்படும். திருமணமாகாதவா் இறக்கும் போது, வாரிசு சான்றிதழ் பெற சில முக்கிய சான்றிதழ்களை சமா்ப்பிக்க வேண்டும். இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் அல்லது அரசிடமிருந்து பெறப்பட்ட தாமதமான இறப்புச் சான்று, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓய்வூதிய கணக்கு உத்தரவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பிக்க வேண்டும்.
இறந்தவா் திருமணமானவா் என்றால், திருமண பதிவுச் சான்றிதழ், கடவுச்சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும்.
சிறாராக இருந்தால்...வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா், சிறாராக இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். இறந்தவரின் சகோதரா் அல்லது சகோதரிகளை காப்பாளராகக் கொண்டு விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. தத்தெடுத்துக் கொண்ட குழந்தைக்கு வாரிசு சான்றிதழ் வழங்கும் போது, சட்டபூா்வமான முறையில் தத்தெடுப்பு நடந்துள்ளதா என்பதை வட்டாட்சியா்கள் ஆய்வு செய்திட வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் இணையதளம் வழியே விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பம் கிராம நிா்வாக அலுவலா் அல்லது வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவா் தரவுகள் அனைத்தையும் ஆய்வு செய்து விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் வட்டாட்சியருக்கு அறிக்கையை அனுப்பி வைப்பாா். இதிலிருந்து அடுத்த ஒரு வாரத்துக்குள் வாரிசு சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சார் எனது எனது தாயார் ஈரோடு மாவட்டம் மயிலம்பாடி கிராமத்தில் வசித்து வந்தார் அவர் தற்சமயம் 2020ல் உயிர் இழந்தார் அவருடைய ஆதாரங்கள் அனைத்தும் குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை வீட்டு பத்திரம் ஆகிய அனைத்தும் மயிலம்பாடி கிராமம் ராம் நகர் என்ற முகவரியில் உள்ளது வாரிசுதாரரான நாங்கள் திருப்பூர் மாவட்டத்தில் மகள் மகன்கள் அனைவரும் வசித்து வருகிறோம் என் அம்மாவிற்கான எங்களுடைய வாரிசு சான்றிதழ் எங்கு பெற வேண்டும் மைலம்பாடி ஈரோடு மாவட்டத்தில அல்லது திருப்பூர் மாவட்டத்தில் ஐயா இருக்கு தாங்கள் தயவு கூர்ந்து பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன் நன்றி
ReplyDelete