கருணை அடிப்படையில் 14 பேருக்கு அரசு பணி

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் பணிபுரிந்த அலுவலர்களின் வாரிசுதாரர்கள் 14 பேருக்கு, கருணை அடிப்படையில், பணி நியமன ஆணைகளை, அமைச்சர் கணேசன் வழங்கினார்.

கடந்த, 2007 - 2008 முதல் 2011 - 12ம் ஆண்டு வரை, தமிழகத்தில் 32 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை, பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ், திறன்மிகு மையங்களாக மேம்படுத்தும் பணி துவங்கியது.

இத்திட்டத்தின் கீழ், 52 புதிய தொழிற்பிரிவு கள் உருவாக்கப்பட்டு, 2,682 இருக்கைகள் ஏற் படுத்தப் பட்டுள்ளன. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உதவியோருக்கு, ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, 2019 - 20ம் ஆண்டுக்கான சிறந்த மேலாண்மைக் குழு தலைவராக, சேலத்தை சேர்ந்த, 'ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் மறைந்த ரமேஷ்ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த அரசு தொழிற்பயிற்சி நிலையமாக, மேட்டூர் அணை அரசு தொழிற்பயிற்சி நிலை யம்; தொழிற்பயிற்சி நிலைய நிறுவன பங்குதா ரராக, 'ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் லிமிடெட்' நிறுவனம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் நேற்று, விருதுகளை வழங்கினார். மேலும், கருணை அடிப்படையில், 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுதின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post