உங்கள் மொபைல் டேட்டாவை காலி செய்யும் ஆப்ஸ்கள்! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

மால்வேர்கள் நீங்கள் உங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் போதும், உங்கள் வைஃபையை ஆன் செய்து வைத்திருக்கும் நேரத்திலும் உங்களுடைய தினசரி டேட்டாவை திருடும்.

செல்போனில் ஏகப்பட்ட ஆப்ஸ்கள் இருக்கின்றன. அதுவும் குறிப்பாக நாம் தினந்தோறும் நமக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ என்ற பாகுபாடு இன்றி பல ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து வருகிறோம். இதுபோன்ற ஆப்ஸ்களால் நம் செல்போன் பாதிக்கப்படுமா என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி இது போன்ற ஆப்ஸ்களை நாம் டவுன்லோடு செய்து வருகிறோம். ஆனால் இப்படிப்பட்ட ஆப்ஸ்கள் தான் நம் மொபைல் போனுக்கு மிகப்பெரும் ஆபத்தாக அமைகிறது என்பதை நாம் ஒருபோதும் அறிவதில்லை. உங்கள் மொபைல் போனுக்கு ஆப்பு வைக்கும் இத்தகைய ஆப்ஸ்கள் குறித்து தான் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் TOLL FRAUD எனும் செல்போனுக்கு தீங்கிழைக்கும் ஒரு MAll WARE உங்கள் வைஃபை டேட்டாவை காலி செய்து விடும் என்று தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது TOLL FRAUD என்று அழைக்கப்படும் இந்த MAll WARE எஸ்எம்எஸ் மூலமாகவும், அழைப்பு மூலமாகவும் உங்கள் டேட்டாவை திருடும்.

மைக்ரோசாப்ட் 365 அளித்த ஆராய்ச்சி தரவுகளின் படி, குறுஞ்செய்திகள் மூலமாக அனுப்பப்படும் இது MALL WARE அல்லது செல்போன் அழைப்பு மூலமாக கொடுக்கப்படும். MAll WARE இது இரண்டையும் விட இந்த TOLL FRAUD செல்போனுக்கு மிகவும் தீங்கிழைக்கும் என தெரிவித்துள்ளது. உதாரணமாக குறிப்பிட்ட ஒரு நெட்வொர்க்கை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களே இதுபோன்ற தீங்கிழைக்கும் மொபைல் ஆப்-களின் முதல் தேர்வு. உங்களுடைய சப்ஸ்கிரிப்ஷன் டேட்டாவை பொறுத்தே இவை உங்கள் மொபைல் போனுக்குள் ஊடுருவுகின்றன.

இதுபோன்ற மால்வேர்கள் நீங்கள் உங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் போதும், உங்கள் வைஃபையை ஆன் செய்து வைத்திருக்கும் நேரத்திலும் உங்களுடைய தினசரி டேட்டாவை திருடும். இதுபோன்ற மால்வேர்கள் உங்கள் போனுக்குள் ஊடுருவி விட்டால் உங்களை அறியாமலேயே அதாவது ஒன் டைம் பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும் பாஸ்வேர்டை கூட அதுவே தானாக போட்டுக் கொண்டு நீங்கள் சப்ஸ்கிரைப் செய்ய விரும்பாத சேனல்களையோ அல்லது சில இணையதள பக்கங்களையோ சப்ஸ்கிரைப் செய்துவிடும். மேலும் இந்த டால் ஃப்ராட் உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய செக்யூரிட்டி ஆப்ஷனையே காலி செய்யக்கூடும். இதுகுறித்து ஆண்ட்ராய்ட் ஏ பி ஐ என்ற பாதுகாப்பு ஆப்ஸ்கள் மூலமாக இதுபோன்ற மால்வேர் ஆப்ஸ்களை முடக்குவது குறித்து நாங்கள் கூகுள் பிளே ஸ்டோருடன் பேசி வருகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்ட் பார்ட்டி என்று சொல்லப்படக்கூடிய ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக உங்கள் மொபைல் போனில் சில ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வதற்கு முன்பாக அவை சில அனுமதிகளை கேட்கும், அப்படிப்பட்ட நேரத்தில் அந்த ஆப்ஸ்கள் குறித்து முழுவதுமாக அறியாமல் உங்கள் மொபைல் ஃபோனை அல்லது உங்கள் மைக்ரோஃபோனை பயன்படுத்த அனுமதி தர வேண்டாம் என்றும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post