10 th படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை : மாதம் ரூ.69,000 வரை சம்பளம்.

10 th படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை : மாதம் ரூ.69,000 வரை சம்பளம்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கடற்படையில் பயர் என்ஜின் டிரைவர், பயர்மேன், ( Fire Engine Driver, Fireman)

பணியிடங்களுக்கு காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட்18 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் https://www.joinindiannavy.gov.in/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.

இப்பணிகளுக்கான முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி பயர் என்ஜின் டிரைவர், பயர்மேன்,பணிக்கென மொத்தம் 220 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

• பயர் என்ஜின் டிரைவர் - 36 பணியிடங்கள்

• பயர்மேன் - 184 பணியிடங்கள்

ஊதியம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

• பயர் என்ஜின் டிரைவர் - ரூ. 21,700 - 69,100/-

• பயர்மேன் - ரூ. 19,900 - 63,200/- விண்ணப்பிக்கும் முறை :

• அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.joinindiannavy.gov.in/-க்கு செல்லவும் . வேலை குறித்த முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

• மேற்கூறிய இணைப்பிலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

• அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.

• இந்திய கடற்படை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

• அனைத்து தகவல்களையும் எழுதி முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

• இறுதியாக விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post