மாணவர், ஆசிரியர்கள் உற்சாகம்!
ஒரு மாத கோடை விடுமுறை முடிந்து, புதிய கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு வரையிலும் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, மே 13 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
ஒரு மாத விடுமுறை முடிந்து, புதிய கல்வியாண்டில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக, 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கின.இதையொட்டி, மாநிலம் முழுதும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல பள்ளிகளின் நுழைவு வாயில்களில், வாழை இலை மற்றும் பூ தோரணம் கட்டி, மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். வகுப்பறை எழுத்து பலகைகளில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, புதிய கல்வி ஆண்டு வரவேற்கப்பட்டது. தொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் புத்தாடை அணிந்து வந்து, சீருடையுடன் வந்த மாணவர்களுக்கு பூக்கள் மற்றும் சாக்லேட் கொடுத்து வரவேற்றனர். மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில், யானையை அழைத்து வந்து மாணவர்களை வரவேற்றனர். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில், செண்டை மேளம் முழங்க மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
சில இடங்களில் கடலை மிட்டாய், சாக்லேட் ஆகியவற்றுடன், மாணவர்களுக்கு பேனா, பென்சில்களும் இலவசமாக வழங்கப்பட்டன. சில இடங்களில் முதல் பாடப்பிரிவில், மாணவர்களுடன் பெற்றோரும் வகுப்பறையில் அமரவைக்கப்பட்டு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
முதல் நாளான நேற்றே, பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இலவச பாடப் புத்தகம், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த ஒரு வாரம் முழுதும், அரசு பள்ளிகளில் நல்லொழுக்கம் மற்றும் புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.தனியார் பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் நேற்றே வகுப்புகள் துவங்கின.
முதற்கட்டமாக, கடந்த கல்வி ஆண்டின் பழைய பாடங்களை மாணவர்களுக்கு நினைவு கூர்ந்து விட்டு, படிப்படியாக புதிய பாடங்கள் நடத்தப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2வுக்கு வரும் 20ம் தேதியும், பிளஸ் 1க்கு 27ம் தேதியும் வகுப்புகள் துவங்க உள்ளன. குழந்தைகள் அடம்;
பெற்றோருக்கு இடம்!கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளும் நேற்றே துவங்கின. மாநிலம் முழுதும் உள்ள நர்சரி பள்ளிகளில், மழலையர் வண்ண உடைகளுடன், குழந்தைத்தனமான குறும்புகள் மற்றும் சிரிப்புடன் பள்ளிக்கு வந்தனர்.பள்ளியில் விட்டு விட்டு பெற்றோர் சென்றதும், அவர்களை பிரிய முடியாமல் சில குழந்தைகள் அழ ஆரம்பித்து, வகுப்பறைகளை விட்டு வெளியே ஓடின.
குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும், விளையாட்டு பொம்மைகள் வழங்கி விளையாட வைத்தும், ஆசிரியர்கள் அவர்களின் கவனத்தை ஈர்த்தனர். பல இடங்களில், பள்ளிக்கு குழந்தைகளை பழக்கப்படுத்தும் வகையில், பெற்றோரும் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டனர்.