கல்வி அமைச்சக முயற்சி; ஐ.நா., சபை அங்கீகாரம்

The initiative of the Central Government with the help of information technology facility to educate students during the Corona period has received a United Nations award.

During the Corona epidemic, students were unable to come to school and study. Subsequently, under the Prime Minister's 'e-Vidya' program, education was imparted using an information technology facility called ICT. Accordingly students were taught education ‘digitally’ and through the internet.

25 crore students have benefited through this initiative. This initiative of the Central Government has now received international recognition. The project has received an award from the United Nations Educational, Scientific and Cultural Center (UNESCO).

கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக, தகவல் தொழில்நுட்ப வசதியின் உதவியுடன் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் விருது கிடைத்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து படிப்பதில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமரின் 'இ - வித்யா' திட்டத்தின் கீழ், ஐ.சி.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, கல்வி கற்பிக்கப்பட்டது. இதன்படி மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' மற்றும் இணைய வழியில் கல்வி கற்பிக்கப்பட்டது.

இந்த முயற்சியின் வாயிலாக 25 கோடி மாணவர்கள் பயன் அடைந்தனர். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. 'யுனெஸ்கோ' எனப்படும், ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையத்தின் விருது, இத்திட்டத்துக்கு கிடைத்துள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post