அசாம் வெள்ளம்: ஜூலை 26-ல் பள்ளிகள் திறப்பு

அசாம்: அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அசாமில் ஏற்பட்ட கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 93 பேர் பலியாகினர்.



அசாம் மாநிலத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி முதல் பெய்துவரும் கனமழையால், மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.



இதுதொடர்பாக அசாம் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை அறிவித்துள்ளது. கோடை விடுமுறையானது 5 நாள்களுக்கு முன்னரே அறிவித்துள்ளது அசாம் மாநில அரசு.



அதன்படி, அசாமில் பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை கோடை விடுமுறை அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



மேலும், கௌஹாத்தி பல்கலைக்கழகம் நடத்தும் சில தேர்வுகள் மற்றும் உதவி ஆய்வாளர் ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கான உடற்தகுதி தேர்வு உள்பட பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் அசாம் அரசு தெரிவிக்கப்படுகிறது

Post a Comment (0)
Previous Post Next Post