முதுநிலை மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற 25 பேரை, மத்திய அரசு இன்று கவுரவிக்கிறது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள், கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இத்தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவம் மற்றும் பல் மருத்துவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 25 பேருக்கு, இன்று டில்லியில் பாராட்டு விழா நடக்கிறது.
டாக்டர்கள் தினத்தையொட்டி, லேடி ஹர்டிங்கி மருத்துவ கல்லுாரியில் நடக்கும் இந்த விழாவில், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று, அதிக மதிப்பெண் பெற்ற 25 பேருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்க உள்ளார்.
'மத்திய அரசு, முதன் முறையாக நடத்தும் இந்த பாராட்டு விழா, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்கில், மேலும் அதிகமானோர் சிறப்பு மருத்துவ சேவைக்கு வருவதை ஊக்குவிக்கும்' என, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.