பள்ளி, கல்லூரிகளில் சலுகை விலையில் ஆவின் உணவுப் பொருட்கள்

சலுகை விலையில் ஆவின் உணவுப் பொருட்கள்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில், ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கும் உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பேசினார்.
திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி (விசிக):

பால்வளத் துறை அமைச்சர் தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் சலுகை விலையில் ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கும் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பாரா. பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்: உறுப்பினர் கேட்ட கேள்வி குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Post a Comment (0)
Previous Post Next Post