இலங்கை மக்களுக்கு பள்ளி மாணவி ரூ.3 ஆயிரம் நிதி

பள்ளி மாணவி ரூ.3 ஆயிரம் நிதி

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் வாலாஜாபாத் வட்டம் உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

மேலும், இலங்கையின் பொருளாதார பிரச்னையால், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க, தமிழகம் சார்பாக அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதையெட்டி, பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்கலாம் என தெரிவித்தார்.அதன்படி, வாலாஜாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி ச.லட்சுமிபிரியா, தனது சேமிப்பு நிதியில் இருந்து ரூ.3 ஆயிரத்தை கலெக்டர் ஆர்த்தியிடம், காசோலையாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment (0)
Previous Post Next Post