ஏர்டெல் ப்ரீபெய்டு கட்டணம்
மக்களின் அன்றாட தேவைகளில் முக்கியமான ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவருகிறது.
அதாவது, ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மீண்டும் உயர உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு, வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. இப்போது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு பலத்த அடியாக, ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரிக்க தயாராக உள்ளது.
இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்திவிட்டார். இந்த முறை ஒரு பயனரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வசூலிக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது என்பது அதில் இருக்கும் முக்கியமான தகவல் ஆகும். அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அதாவது, 5ஜி ரிவர்ஸ் விலைகளுக்கான டிராயின் பரிந்துரையில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடையவில்லை. 5ஜி ரிசர்வ் விலையை 90 சதவீதம் குறைக்க வேண்டும் என்று ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்தின. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே அதிகப்படியான கடன் சுமையும், போட்டியும் எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை விலை குறைத்ததது போதுமானதாக இல்லை என்று ஏர்டெல் கூறியுள்ளது.
கடந்த வருடம் டெலிகாம் நிறுவனங்கள் 18-25 சதவீதம் வரையில் கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் கட்டணத்தை உயர்த்தி 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்குப் போதுமான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது. இதனால் 5ஜி சேவை கட்டணமும் மிகப்பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறுகையில், எனது சொந்த எண்ணம் என்னவென்றால், இந்த ஆண்டில் சில கட்டண உயர்வை நாம் காணத் தொடங்க வேண்டும். ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாக இருப்பதாக நான் நம்புகிறேன். ஒரு பயனரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வசூலிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியும், என கூறினார். பிஎஸ்என்எல் 4ஜி சேவை
கடந்த ஆண்டு, வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தனியாருக்குச் சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர்களும் தங்கள் ப்ரீபெய்ட் விலைகளை கிட்டத்தட்ட 18 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தனர். விலை உயர்வு இருந்தபோதிலும், ஏர்டெல் அதிக 4G பயனர்களை ஈர்த்தது. மார்ச் மாதத்தில் அதன் பயனர்களின் எண்ணிகை 5.24 மில்லியன் ஆகும். இது முந்தைய மூன்று மாத காலத்தில் 3 மில்லியன் சந்தாதாரர்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
இந்த முறையும் இதே போட்டி தான் யார் முதலில் உயர்த்த போகிறார்கள் என்பது தான் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. ஏர்டெல் உயர்த்தும் வரையில் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உயர்த்தாது. இதற்கிடையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.