மூர்க்கமான மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளில் மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இளம் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க மாநாட்டில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சி முடிவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், பள்ளியில் மாணவர்கள் மூர்க்கமாக நடப்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே என்ற பாடலை மேற்கோள் காட்டினார்.

' மூர்க்கமாக நடந்து கொள்ளும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும்'. ஆசிரியர்களுக்கும் மாணவர்களை வழிநடத்த பயிற்சி தேவை' இவ்வாறு அமைச்சர் பேசினார்

1 Comments

  1. ஆசிரியர்கள் மேல் அவருக்கு எவ்வளவு நல்ல எண்ணம்.எப்படி பயிற்சி கொடுப்பார் மாணவர்கள் எது செஞ்சாலும் சிலை மாதிரி நிக்கவா?

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post