பல்கலைகள் பட்டமளிப்பு விழா: விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 24, 2022

பல்கலைகள் பட்டமளிப்பு விழா: விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு

பல்கலை பட்டமளிப்பு விழா

கோவை வேளாண் மற்றும் பாரதியார் பல்கலைகளில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 43வது பட்டமளிப்பு விழா விரைவில் நடக்க உள்ளது. கடந்த, மார்ச், 31 தேதி வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவம், இதர விபரங்களை பல்கலையின் இணையதளம், www.tnau.ac.in மூலம் வரும், 25 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணத்தை, SBI collect(The comptroller, TNAU, coimbatore) என்ற கணக்கில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை, ஜூன் 18 ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் பல்கலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 0422- 6611506 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.பாரதியார் பல்கலை கடந்த, நவ., 2019 முதல் ஜன., 2022 வரையிலான காலத்தில், பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் மாணவர்கள் பயின்ற கல்லுாரிகளில் பெறலாம்.

பிற மாணவர்கள் பாரதியார் பல்கலையின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெறலாம். இதுதவிர, www.b--u.ac.in என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். மே 10க்குள் விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும். 2019 டிச., 13 முதல், 2021 மே 10 வரையிலான காலத்தில் பி.எச்டி., பட்டம் பெற்ற வர்களும் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot