துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு

இரண்டு நாள் கருத்தரங்கு

ஊட்டி ராஜ்பவனில், ஏப்., 25, 26 ல் புதிய 'உலக கட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் 2047-ம் ஆண்டிற்குள் உலக நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும்' என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களின் துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு நடக்கிறது.

இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார், ஜோஹோா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர்பங்கேற்கின்றனர்.

கவர்னர் ரவி பங்கேற்பு

மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், மத்தியபல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களின்துணைவேந்தர்கள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் கருத்தராங்கில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கருத்தரங்கை கவர்னர் ரவி துவக்கி வைக்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக மாலை 5:30 மணிக்கு ஊட்டி ராஜ்பவன் வந்தார் . கலெக்டர் அம்ரித், எஸ்.பி., ஆசிஷ் ராவத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post