எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் 1,625 காலிப்பணியிடங்கள்

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் 1,625 காலிப்பணியிடங்கள் - விவரங்கள் இதோ!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் ஆகும்.

இந்தப் பணிகளுக்கான விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 11ஆம் தேதி ஆகும்.

www.ecil.co.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிட விவரங்கள் :

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மொத்தம் 1,625 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் 814 இடங்கள் எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பிரிவிலும், 184 பணியிடங்கள் எலெக்ட்ரீசியன் பிரிவிலும், பிட்டர் பிரிவில் 627 பணியிடங்களும் இருக்கின்றன.

பணியிடத்துக்கான வயது தகுதி :

இந்தப் பணிகளில் சேருவதற்கு 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 30 வயது மிகாதவராக இருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி :

* எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதன் ஹோம் பேஜ் பக்கத்தில் உள்ள கெரியர் டேப் கீழ் இ- ரெக்ரூயிட்மெண்ட் என்பதை கிளிக் செய்யவும்.

* "Click here to apply for junior Technician on Contract Positions against Advt. No. 13/2022'' என்ற லிங்க் மீது கிளிக் செய்யவும். இப்போது அப்ளை என்ற லிங்க் மீது கிளிக் செய்யுங்கள்.

* இங்கு காண்பிக்கப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

* விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து விட்டு, எதிர்கால தேவைகளுக்காக அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்க ஊதிய விவரம்:

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும். முதல் ஆண்டில் ரூ.20,480 ஊதியமும், இரண்டாம் ஆண்டில் ரூ. 22,528 ஊதியமும், 3ஆம் ஆண்டில் ரூ.24,780 ஊதியமும் வழங்கப்படும்.

இது தவிர மருத்துவக் காப்பீடு, கம்பெனி பிஎஃப், அலுவலக நேரத்தின்போது டிஏ / டிஏ போன்ற சலுகைகள் கிடைக்கும். விதிமுறைகளுக்கு உட்பட்டு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். பணி நியமன நடவடிக்கைகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.

கல்வித் தகுதி :

எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் அல்லது எலெக்ட்ரீசியன் அல்லது பிட்டர் ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 2 ஆண்டு ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். இது தவிர மத்திய திறன் வளர்ச்சி அமைச்சகம் வழங்கும் ஓராண்டு என்.ஏ.சி. சான்றிதழ் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். படித்து முடித்த பிறகு உற்பத்தி, தரம் மற்றும் மெடீரியல் மேலாண்மை போன்ற துறைகளில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு நாடெங்கிலும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post