TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. புதிய நடைமுறை அமல்..!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அனைத்து சான்றிதழ்களையும் பிடிஎஃப் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அரசு பள்ளியில் புகுந்த பாம்பு

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் கா.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடும் தேர்வுகளுக்கு இனி விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ்களை பிடிஎஃப் வடிவில் பதிவேற்ற வேண்டும். சான்றிதழ் பதிவேற்றத்தில் தவறு இருந்தால் ஓடிஆர் கணக்கு மூலம் சரி செய்ய அவகாசம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யும் சான்றுகளின் அடிப்படையில் தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரிபார்க்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை குறித்த விவரங்களை https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/21_2022_PRESS%20RELEASE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Post a Comment (0)
Previous Post Next Post