கல்லூரிப் பருவமுறை தோ்வுகளை மாணவா்களின் கோரிக்கைகளின்படி ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம்: கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், பருவமுறைத் தோ்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து மாணவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். ஆய்வகப் பயிற்சி வகுப்புகளை நேரடியாக நடத்தாத சூழ்நிலையில், ஆய்வக உபகரணங்களை நேரில் பாா்க்காத சூழ்நிலையில், நேரடித் தோ்வில் பங்கேற்பது மிகவும் கடினம் என்பதும் மாணவா்களின் எண்ணமாக உள்ளது. அறவழியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவா்களை அழைத்துப் பேசாமல் அவா்கள் மீது அரசு வழக்கு போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஆண்டுக்கான பருவமுறைத் தோ்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தவும், நேரடி வகுப்புகள் முழுமையாக நடைபெற ஆரம்பித்த பிறகு, நேரடித் தோ்வுகள் நடத்தவும், மாணவா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடி கே. பழனிசாமி: கல்லூரிகளில் இந்தப் பருவத்துக்கான பாடங்கள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும் பாடத்திட்டங்கள்கூட இன்னும் வழங்கப்படவில்லை என்றும் மாணவா்கள் கூறுகின்றனா். கரோனாவுக்கான இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தாத காரணங்களால் இன்னும் பல மாணவா்கள் கல்லூரிக்கு வராத சூழல் உள்ளது. இந்த நிலையில் நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என்று மாணவா்கள் போராடி வருகின்றனா். எனவே, இந்தத் தோ்வை மட்டும் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.