நிர்வாகம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதி 2021-2022-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீதான மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - தமிழ் நாட்டிலுள்ள பத்திரிகை துறையினருக்கான பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி உயர்த்தி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நிர்வாகம்-4)த் துறை
அரசாணை (ப) எண்.116
நாள் 10.11.2021
திருவள்ளுவர் ஆண்டு 2052 பிலவ வருடம் ஐப்பசி 24-ஆம் நாள் படிக்கப்பட்டவை:
1. அரசாணை (நிலை) எண்.66, செய்தி மற்றும் சுற்றுலா (செ.வெ.)த் துறை, நாள் 20.3.1997.
2. அரசாணை (நிலை) எண்.85. செய்தி மற்றும் சுற்றுலா (செ.வெ.)த் துறை. நாள் 28.4.1999.
3. அரசாணை (நிலை) எண்.78. செய்தி மற்றும் சுற்றுலா (செ.வெ.}த் துறை, நாள் 11.4.2000.
4. அரசாணை (நிலை) எண்.144, செய்தி மற்றும் சுற்றுலா (செ.வெ.)த் துறை, நாள் 28.9.2001.
5. அரசாணை (நிலை) எண்.246, செய்தி மற்றும் சுற்றுலா (நிர்.4.)த் துறை, நாள் 16.10.2006.
6. அரசாணை (நிலை) எண். 121. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நிர்வாகம்-4)த் துறை, நாள் 30.07.2018
7. 2021-2022 ஆம் ஆண்டுக்கான மாண்புமிகு அமைச்சர் (செய்தி) அவர்களின் அறிவிப்பு நாள் 06.09.2021.
ஆணை:
தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி. பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள். செய்தியாளர்கள். புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக பார்வை ஒன்று முதல் நான்கு வரை படிக்கப்பட்ட அரசாணைகளின்படி, முறையே ரூ.25,000/-, ரூ.40,000/-, ரூ.50,000/ ரூ.2,00,000/- என வழங்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2. மேலே ஐந்தாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் இறந்து விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.2,00,000/- என்றும். 15 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால், ரூ.1.50,000/- என்றும். 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால், ரூ.1,00,000/- என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால், ரூ.50,000/- என்றும் குடும்ப உதவி நிதி வழங்க ஆணை வெளியிடப்பட்டது.
3. மேலே ஆறாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் இறந்து விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.3,00,000/- என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால் ரூ2,25,000/- என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால் ரூ.1.50,000/- என்றும். 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால் ரூ.75,000/- என்றும் குடும்ப உதவி நிதி வழங்க ஆணை வெளியிடப்பட்டது.
4. 2021-2022-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் அறிவிப்பினை அறிவித்தார்:
"பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழைதிருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தற்பொழுது குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப ரூபாய் மூன்று இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் குடும்ப உதவி நிதி மூன்று இலட்சத்திலிருந்து ரூபாய் ஐந்து இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்"
5. அரசின் கவனமான பரிசீலனைக்குப்பின்னர். மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது. பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, இறந்து விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் ரூ3,75,000/ (ரூபாய் மூன்று இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் ரூ.1,25,000/- (ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
6. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.